பொள்ளாச்சியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..! 40 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்! - alumni meet
Published : Feb 11, 2024, 8:25 PM IST
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. இந்த பள்ளியில் 1983-84 காலகட்டத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் 40 வருடங்களுக்கு முதல் முறையாக சந்தித்தனர்.
அப்போது ஒவ்வொருவரும் தாங்கள் பள்ளியில் படித்த தருணத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தும், தாங்கள் தற்போது பணியாற்றி வரும் நிறுவனங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். இது குறித்து இப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் கூறும்பொழுது ”தற்போது தனக்கு 88 வயது ஆகிறது.
இந்த பள்ளியில் 1983 முதல் 86 வருடம் வரை இங்கு படித்த மாணவர்களிடம் மிகக் கண்டிப்புடன் நடந்து கொண்டேன், அதை இப்போது நினைக்கும் போது சிரிப்பாக உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய மாணவர்களைச் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தன் படித்த பள்ளியின் மலரும் நிலவுகளை முன்னாள் மாணவி ஒருவர் கூறுகையில் “ இப்பள்ளியில் படித்து தற்போது, பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நிகழ்ச்சியில் தன்னுடன் படித்த பள்ளி நண்பர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது, மீண்டும் இது போல நடக்குமா எனத் தெரியவில்லை எனக் கூறினார்.