தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ராணிப்பேட்டையில் துக்க நிகழ்வில் பட்டாசு வெடித்து 12 பேர் காயம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Firecrackers accident in Ranipet - FIRECRACKERS ACCIDENT IN RANIPET

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 7:11 PM IST

வேலூர்: ராணிப்பேட்டை ஆர்.ஆர்.சாலையில் உள்ள பட்டாணிக்கார தெருவில் வயது மூப்பின் காரணமாக சரஸ்வதி என்பவர் இறந்துவிட்டார். இந்நிலையில், அவரது துக்க நிகழ்வில் அவரது உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது இறுதிச் சடங்கு ஊர்வலத்தில் வெடிக்க பட்டாசு வாங்கி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அப்போது, வேறு ஒரு இடத்தில் இளைஞர் ஒருவர் வெடித்த பட்டாசின் தீப்பொறி குவியலாக வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மீது பட்டதில் பட்டாசு படபடவென வெடித்துச் சிதறியது.

இதில் அங்கிருந்த பரமேஸ்வரி (65), சரவணன் (50), பார்த்திபன் (27), காவியா (27), பாரதி (41), பிரேமா (70) உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயப்பட்டவர்களை மீட்டு, வாலாஜா தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அங்கு அனைவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக ராணிப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், காயம் பட்டவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி ஆகியோர் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details