தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மினி லாரியை இடித்துத் தள்ளிய டிராக்டர்.. தரதரவென இழுத்துச் சென்ற பைக்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Mini Truck Bike Accident - MINI TRUCK BIKE ACCIDENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 5, 2024, 10:09 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும் தரங்கம்பாடி தாலுகாவில் செம்பனார்கோவில் உள்ளது. அந்த வழியாக காளகஸ்திநாதபுரம் - தரங்கம்பாடி பிரதான சாலை உள்ளது. இங்கு நேற்று இரவு (வியாழன்கிழமை) மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்த டிராக்டர் அதிவேகமாக வந்த நிலையில், அதற்கு எதிர்புறமாக செம்பனார்கோவில் நோக்கி வேகமாக வந்த மினி டிரக்கை இடித்து தள்ளியது.

இதனால் தடுமாறிய மினி டிரக் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால், அருகில் வந்துகொண்டிருந்த இருச்சக்கர வாகனத்தை உரசியபடி தரதரவென முன்னுக்கு இழுத்துச் சென்றது. இதில் இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் நூலிழையில் மினி டிரக்  வாகனத்தின் சக்கரத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.  

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்தவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில், இந்த சம்பவம் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details