ETV Bharat / state

எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் ஜெயில் உறுதி..! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்..! - S VE SHEKHER CASE

சமூக வலைத்தளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தை பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.வி.சேகர் (கோப்புப்படம்)
எஸ்.வி.சேகர் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2025, 2:25 PM IST

சென்னை: கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்.பி. எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு 1 மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ் வி. சேகர் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் மறு உத்தரவு வரும் வரை நடிகர் எஸ்.வி. சேகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக் காலமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட முயன்ற சௌமியா அன்புமணி கைது!

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், '' சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எஸ்.வி சேகர் வழக்கு தொடர உரிமை உள்ளது. தவறுதலாக எஸ்.வி சேகர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து கருத்து நீக்கியதுடன் உடனடியாக மன்னிப்பும் கேட்டுள்ளார். மேலும், சாட்சிகள் விசாரணை சட்டம் 65Bன் படி வழக்கு பதிவு செய்யப்படவில்லை'' என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, '' எந்த பதிவுகள் வந்தாலும், அதை படிக்காமல் மற்றவர்களுக்கு பகிர்ந்து விடுவீர்களா? படிக்காமல் பகிர்ந்ததாக தெரிவித்தால்? என்ன காரணத்திற்காக பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் வழக்கில் இன்று (ஜன.2) தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன், நடிகர் எஸ்.வி். சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.