தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் மாசி மகத் தேரோட்டம்... திரளான பக்தர்கள் பங்கேற்பு!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 7:51 PM IST

தென்காசி: தென் தமிழகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மாசி மகத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின்னர் சமுதாய கட்டளைதாரர்கள் சார்பில், தினமும் சாமிக்கு அபிஷேகத் தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மாள் வீதியுலா, ஆன்மிகச் சொற்பொழிவு, பரதநாட்டியம், கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதையொட்டி, காலை சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர், உலகம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் பஞ்ச வாத்தியங்கள் முழங்கக் காலை 9.30 மணிக்கு மேல் சுவாமி தேர் முதலில் இழுக்கப்பட்டது. மேலும் கோயிலைச் சுற்றி தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி, கிழக்கு மாசி வீதிகளில் வலம் வந்த தேர் நிலையத்தை வந்தடைந்த பின்னர், உலகம்மன் தேர் இழுக்கப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் தென்காசி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சிவ சிவ, அரோகரா கோஷம் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் தேர்த் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு இலவசமாக மோர், கலர் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டது. 

ABOUT THE AUTHOR

...view details