தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஈரோடு கரும்பாறையில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை! - leopard movement - LEOPARD MOVEMENT

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 10:10 AM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கடம்பூர் மலைப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள் உள்ளன. குறிப்பாக, சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் குறுகிய மலைப்பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையின் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள பெருமுகை கிராமமான கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் நீர் வழித்தடத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அந்தியூர் வனத்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தியூர் வனத்துறையினர், கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் நீர் வழித்தடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குச் சிறுத்தையின் கால் தடங்கல் பதிவாகியுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து கரும்பாறை சஞ்சீவிராயன்குளம் மற்றும் அதன் நீர் வழித்தடங்கள் செல்லும் பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் எனவும், தங்கள் வீடுகளில் வளர்க்கும் கால்நடைகளைப் பாதுகாப்பாக வைக்குமாறும்,

சிறுத்தையைக் கண்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.  மேலும் காலை நேரங்களில் கரும்பாறை முதல் சஞ்சீவிராயன் குளம் வரையிலான நீர் வழித்தடங்களில் யாரும் கால்நடைகளை மேய்க்க செல்ல வேண்டுமென வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details