'நான் எதற்காக எல்லோருக்கும் உதவுகிறேன்?' - மனம் திறந்த KPY பாலா - KPY bala - KPY BALA
Published : May 11, 2024, 12:55 PM IST
தஞ்சாவூர்: தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் நேற்று (மே 10) தனியார் ரெடிமேட்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சின்னத்திரை புகழ் நடிகரும், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகல் மூலம் பிரபலமான KPY பாலா வருகை தந்து சிறப்பித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் ஏராளமானோரை பார்த்து கையசைத்து பின்பு ரெடிமேட் ஷோரூம் உள்ளே சென்று பார்வையிட்டார்.
பின்பு தஞ்சை மாநகராட்சியில் பணிபுரியும் 20 தூய்மை பணியாளர்களுக்கு ரெடிமேட் ஷோரூம் சார்பில் புத்தாடைகளை வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் KPY பாலா, "பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மை எந்த அளவிற்கு வரவேண்டும் என்ற கேள்விக்கு, பொதுமக்கள் தான் எனக்கு அறிவுரை கூற வேண்டும், பொதுமக்களுக்கு நான் அறிவுரை சொல்லக் கூடாது.
என்னால் முடிந்தவரை நான் பொதுமக்களுக்கு கடைசி வரை உதவி செய்வேன். பொதுமக்களுக்காக நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது; அதற்கான பட்டியல் இருக்கிறது. மேலும் எளியவர்களை தேடிப்போய் பார்த்து அவர்களுக்கு தேவையானதை செய்வேன் என்றார். மேலும் என்னைத் தேடி வருபவர்களுக்கும் உதவி செய்கிறேன் எனவும், இளைஞர்களுக்கு நான் ஊக்கம் அல்ல இளைஞர்கள் தான் எனக்கு ஊக்கம்" என்றும் கூறினார்.