CYCLONE FENGAL : இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் நேரலை.. - CYCLONE FENGAL
Published : Nov 30, 2024, 3:12 PM IST
|Updated : Nov 30, 2024, 3:50 PM IST
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி, தற்போது, சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு திசையில் 180 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கு திசையில் 210 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று (நவ.30) மதியம் காரைக்கால் - மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு மிக அருகில் கரையை கடக்கிறது. அப்போது மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், நேற்று (நவ.29) இரவு முதலே சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று (நவ.29) இரவு தொடங்கிய மழை இடைவிடாமல் பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று (நவ.30) மதியம் புயல் கரையைக் கடக்க இருக்கும் நிலையில் இது தொடர்பான கூடுதல் தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து வரும் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.
Last Updated : Nov 30, 2024, 3:50 PM IST