இந்திய விமானப் படை AIR Show சாகச நிகழ்ச்சி.. சென்னை மெரினாவில் இருந்து நேரலை காட்சிகள்! - Chennai Air Show 2024 Live
Published : Oct 6, 2024, 10:35 AM IST
|Updated : Oct 6, 2024, 1:04 PM IST
சென்னை: இந்திய விமானப்படையின் 92 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி அளவில் விமானப் படைக்கு சொந்தமான போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவைகளின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த சாகச விமானங்கள் காலை 10:30 மணியளவில் தாம்பரம் விமானப் படைத்தளத்தில் இருந்து புறப்பட்டு சென்னை மெரினா கடற்கரையில் சாகசத்தை நிகழ்த்தவுள்ளன. இதில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான 72 விமானங்கள் பங்கேற்கின்றன.விமானப்படையின் விமான சாகசம் கடந்த 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிலையில் 21 வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் மெரினா கடற்கரையில் நடைபெற உள்ளது. பொதுவாக இந்த விமானப்படை சாகச நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்திய விமானப் படை தமது சாகச நிகழ்ச்சியை நடத்த சென்னையை தேர்ந்தெடுத்துள்ளது.இதற்கான மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்வு அக்டோபர் 4 ஆம் தேதி நிறைவு பெற்றது. இதில் சுக்கோய் சு 30, MI 17 VH ஹெலிகஃப்டர்கள், அட்வான்ஸ் லைட் ஹெலிகஃப்டர் (ALH) ஹால் தேஜா, மல்ட்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட், ரஃபேல் ஏர்கிராப்ட் உள்ளிட்டவை பங்கேற்றன. இந்த நிலையில், இந்திய விமானப் படை வீரர்கள் விண்ணில் நிகழ்த்தவுள்ள சாகசங்களின் நேரலை காட்சிகள் இதோ உங்களுக்காக...
Last Updated : Oct 6, 2024, 1:04 PM IST