கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழீஸ்வரர் கோயில் மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! - ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயம்
Published : Feb 16, 2024, 10:41 AM IST
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ சோழீஸ்வரர் ஆலயத்தில், 8ஆம் ஆண்டு மாசி மக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த மாசித் திருவிழாவானது, வருகின்ற 25ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
இதில், 8 நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா போன்றவை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற 21ஆம் தேதி திருக்கல்யாணம், 23ஆம் தேதி 9ஆம் நாள் காலை 6 மணிக்கு திருத்தேர் பவனியும் நடைபெற்ற உள்ளது.
10ஆம் நாளான 24ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதற்கிடையில், சோழீஸ்வரர் வழிபாட்டுக் குழுமம் சார்பில் அம்பாள் உற்சவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் மற்றும் பிரம்மோற்சவம் உள்ளிட்டவையும் நடைபெற உள்ளன. இந்த கொடியேற்று விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.