விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானை.. நூலிழையில் தப்பிய விவசாயி! வைரல் வீடியோ - Wild elephant atrocity - WILD ELEPHANT ATROCITY
Published : Aug 11, 2024, 5:02 PM IST
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சட்டப்பாறை என்ற இடத்தில் விவசாயி காளிமுத்து என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், கடந்த இரண்டு நாட்களாக காட்டு யானை உலாவுவதாகவும், அவை தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள தென்னை, கொய்யா உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தோட்டத்தில் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள பைப் லைன்களையும் உடைத்து சேதப்படுத்துவதாக வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக, வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் உலாவுவதால் அப்பகுதி விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல அச்சம் அடைவதாக தெரிவித்துள்ளனர்.
அதேபோல், யானைகள் சேதப்படுத்திய பயிர்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து, அவற்றை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயியை யானை தாக்க முயன்றதும், அவர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.