சீட்டுக்கே சீட் பெல்ட்.. கேர்மாளம் அரசுப் பேருந்தின் அவல நிலை! - erode kermalam government bus video - ERODE KERMALAM GOVERNMENT BUS VIDEO
Published : Jul 11, 2024, 5:20 PM IST
ஈரோடு: சத்தியமங்கலம் அரசுப் போக்குவரத்து கிளைக்கு உட்பட்ட அரசுப் பேருந்து ஒன்று தினந்தோறும் கேர்மாளம் மலைக்கிராமத்துக்கு இருமுறை இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்து சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலைப்பாதை வழியாக சுஜில்கரை கடந்து கேர்மாளம் செக் போஸ்ட்க்கு செல்கிறது. இதற்கிடையே, கடம்பூர் மலைப்பாதையானது 15 கிமீ தூரம் குறுகிய வளைவுகளைக் கொண்டது மட்டுமின்றி, 300 அடி மலைச்சரிவு பாதையாகவும் உள்ளது.
இந்நிலையில், இந்த வளைந்து நெழிந்த மண்பாதையில் ஓட்டும் ஓட்டுநருக்கு இருக்கையின் சாயும் பகுதி பிடிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இந்த கேர்மாளம் அரசுப் பேருந்தில் ஓட்டுநர் இருக்கையின் சாயும் பகுதி உடைந்த நிலையில் உள்ளதால், அவற்றை பிளைவுட் கட்டி ஓட்டும் அவல நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து வெளியான வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இது மட்டுமின்றி, பேருந்தின் டியூப்லைட் பழுதடைந்து பல நாட்கள் ஆனதால் பயணிகள் இரவு நேரத்தில் இருட்டில் செல்ல வேண்டியுள்ளது எனவும், இதனால் விலங்குகளினால் ஆபத்து, இயற்கையான மணல் சரிவுகள் போன்ற நிகழ்வுகள் நடக்கும் மலைப்பகுதிகளில் இயங்கும் போக்குவரத்து பேருந்துகள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே, இதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.