LIVE: திண்டுக்கலில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்! - EDAPPADI PALANISWAMI CAMPAIGN - EDAPPADI PALANISWAMI CAMPAIGN
Published : Apr 9, 2024, 5:19 PM IST
|Updated : Apr 9, 2024, 8:59 PM IST
திண்டுக்கல்: தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.அந்த வகையில், தற்போது தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பங்களாமேடு பகுதியில், அதிமுக வேட்பாளர் வி டி நாராயணசாமியை ஆதரித்து தேனியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி மணிக்கூண்டு பகுதியில், அதிமுக கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்.. தேர்தல் பிரச்சாரங்களில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளையும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக கட்சியினரையும் ஈபிஎஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் இம்முறை திமுக, அதிமுகவுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் போட்டி நிலவுகிறது என ஈபிஎஸ் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 9, 2024, 8:59 PM IST