Live: வடசென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்! - eps thiruvallur campaign - EPS THIRUVALLUR CAMPAIGN
Published : Apr 7, 2024, 6:05 PM IST
|Updated : Apr 7, 2024, 10:20 PM IST
திருவள்ளூர்: அதிமுக சார்பில் சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராயபுரம் ஆர்.மனோவை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சென்னை கொளத்தூரில் இன்று (ஏப்ரல் 7) பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதன் நேரலைக் காட்சிகள்..அதிமுக சார்பிலும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் வரிசை எண் அடிப்படையில் முதல் தொகுதியாக உள்ள திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் களம் காணும் வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பியை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி முன்னதாக இன்று வாக்கு சேகரிக்கிறார். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), மாதவரம், ஆவடி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் அடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Apr 7, 2024, 10:20 PM IST