காமராஜர் காலத்தில் இருந்தே சமூக சேவைகள் ஆற்றியுள்ளேன்.. தகைசால் தமிழர் விருதாளர் குமரி அனந்தன் பேட்டி! - Thagaisal Thamizhar Award
Published : Aug 3, 2024, 4:31 PM IST
வேலூர்: இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு, ரூ.10 லட்சத்திற்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து செய்தியாளரிடம் பேசிய குமரி அனந்தன், "தன்னுடைய சேவையை பாராட்டி தமிழக அரசு தனக்கு தகைசால் தமிழர் விருது அறிவித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. கர்மவீரர் காமராஜர் காலத்தில் இருந்து தமிழுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் பல்வேறு சமுக சேவைகளை தான் ஆற்றியுள்ளேன்.
தான் தமிழுக்கு செய்த தொண்டினை மனதில் ஏற்று எனக்கு இந்த விருதினை அளிப்பதற்கு பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். காமராஜரின் தொண்டநாகிய எனக்கு இந்த விருது அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.
தகைசால் தமிழர் விருது கடந்த 3 ஆண்டுகளில் சங்கரைய்யா, ஆர். நல்லகண்ணு மற்றும் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.