கோயில் சன்னதி அருகே கார் - ஆம்னி வேன் மோதி விபத்து.. சிசிடிவி காட்சிகள் வைரல்! - Coimbatore Car Omni Van accident - COIMBATORE CAR OMNI VAN ACCIDENT
Published : Aug 16, 2024, 7:43 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அவினாசி மேம்பாலம் அருகே தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுள் முக்கியமான கோயில் இது எனலாம். அதனால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.
இந்நிலையில், இந்த கோயில் முன்பாக ஆகஸ்ட் 13ஆம் தேதி கேரள பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது, மேம்பாலத்தை நோக்கி வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று, ஸ்விஃப்ட் கார் மீது மோதியது.
இதில் ஆம்னி வேன் முன்புறம் முற்றிலும் சேதம் அடைந்தது. இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் ஆம்னி வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அதனையடுத்து, விபத்தில் சிக்கிய ஸ்விஃப்ட் காரில் இருந்த கணவன், மனைவியை சிறுது நேர போராட்டத்திற்குப் பின் மீட்ட நிலையில், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தற்போது இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.