தமிழகத்தை மீண்டும் மிரட்டும் மழை....சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு நேரலை...
Published : 5 hours ago
|Updated : 5 hours ago
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால், 23 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த சூழலில் இன்று (டிசம்பர் 12) வியாழக்கிழமை 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போதைய, வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள்தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாக ை மாவட்டம் கோடியக்கரையில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேளாங்கன்னி -13, மதுராந்தகம் -12 கொளத்தூர், மாதவரம் , அம்பத்தூர் தலா 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் , நாகை, தஞ்சாவூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தற்போது செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன் நேரலை காட்சிகள்...
Last Updated : 5 hours ago