காஞ்சிபுரம் படப்படை அருகே நிகழ்ந்த நெஞ்சை பதறவைக்கும் பைக் விபத்து! - BIKE ACCIDENT - BIKE ACCIDENT
Published : Jun 17, 2024, 6:11 PM IST
சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அம்மணம்பாக்கம்பகுதியைச் சார்ந்தவர் வேலு (43) இவர் கார்பெண்டர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று வண்டலூர், வாலாஜாபாத் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று விட்டு, ஒருபுறத்தில் இருந்து மறுபுறம் உள்ள சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று வேலுவின் இருச்சக்கர வாகனத்தின் மீதி மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த அவர் மீது மற்றொரு இரு சக்கர வாகனம் ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே வேலு உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த மணிமங்கலம் போலீசார், வேலுவின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த விபத்தின் சி.சி.டிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து சி.சி.டிவி காட்சிகளின் அடிப்படையில் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஐந்து நாட்களில் மட்டும் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் ஜந்து பேர் உயிரிழந்ததுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.