தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

கொலை செய்யப்பட்ட இடத்தில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு கட்சித் தொண்டர்கள் இதய அஞ்சலி! - BSP ARMSTRONG OBITUARY - BSP ARMSTRONG OBITUARY

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 7, 2024, 5:23 PM IST

சென்னை:  பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னையில் நேற்றைய முன்தினம் வெள்ளிக்கிழமை மாலை வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார். சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியில் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

பகுஜன் சமாஜ் கட்சி தேசியத் தலைவர் மாயாவதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரசு தலைவர் ஜி.கே வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். 

இதனிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது தொண்டர்களும், பொதுமக்களும் மலர் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோ காண்போரை கண்கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் உடல் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்துக்கு இன்று காலை வந்த புத்துமத துறவிகள் உரிய சடங்குகளை செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details