குடியிருப்புக்குள் உலா வந்த ஒற்றை கரடி; அச்சத்தில் பொதுமக்கள்! - NILGIRIS OOTY BEAR VIDEO
Published : Dec 17, 2024, 11:37 AM IST
நீலகிரி: உதகை கூக்கல் தொரை குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை கரடி உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நீலகிரி மாவட்டம், சுமார் 65 சதவீதம் வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப்பகுதி யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதிகளில் நிலவும் வறட்சியின் காரணமாக புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர் கதையாக இருந்துவருகிறது.
இந்நிலையில், உதகை கூக்கல் தொரை பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை கரடி ஒன்று உலா வந்துள்ளது. அவை அப்பகுதியில் இருந்த வீட்டுற்குள் புகுவதற்கு காத்திருந்த நிலையில், அப்பகுதியில் இருந்தவர்கள் அதனை விரட்டி அடித்துள்ளனர். தொடர்ந்து, இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.