தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

விஜயின் தைரியம்.. நடிகர் பிரபு ஆதரவு! - TVK VJAY MAANAADU

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2024, 3:39 PM IST

திருநெல்வேலி: நெல்லையில் நடைபெற்ற பிரபல நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகர் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விஜயின் தவெக மாநில மாநாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரபு, “என் தம்பி நடிகர் விஜய்க்கு எனது தந்தை ஆசியும் எனது முழு ஆதரவும் எப்போதும் உண்டு. ஜனநாயக நாட்டில் யார்வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். விஜய் அரசியலில் நல்ல நிலைக்கு வரவேண்டும். விஜய் இவ்வளவு தைரியமாக அரசியலில் களமிறங்கி அசத்துகிறார். அவருக்கு ஆண்டவன் ஆசீர்வாதம் உள்ளது. விஜய் நல்ல பாதையில் செல்வார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.

தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஒட்டுமொத்த சினிமா துறையும் ஆதரவு தெரிவிக்குமா? என்ற கேள்விக்கு என்னோட ஆதரவு எப்போது உண்டு. ஆனால் மற்றவர்களின் ஆதரவை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். இதேபோல் இந்த விழாவில் பங்கேற்ற நடிகை ரெஜினா செய்தியாளர்களிடம் கூறும் போது, “நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். நடிகர் விஜய் வெற்றிகரமான நடிகர். வெற்றிகரமான தொழிலதிபர், வெற்றிகரமான அரசியல்வாதியாகாவும் ஆவார். அதற்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details