ஆனி அமாவாசை; முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்! - Aani Amavasai - AANI AMAVASAI
Published : Jul 5, 2024, 9:14 AM IST
Aani amavasai-tharpanam-in-rameswaram-temple
ராமநாதபுரம்: ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் போது, முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, தர்ப்பணம் செய்வது, புண்ணிய நதிகளில் நீராடுவது, தானம் வழங்குவது சகலவிதமான பாவங்களையும் அழிக்க உதவும் என்பது ஐதீகம். அந்த வகையில் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு இன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
அக்னி தீர்த்த கடலில் தீர்த்தமாடி மறைந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்துவிட்டு பூஜைக்காக அழைத்து வந்த பசுவிற்கு பழங்கள், கீரை வகைகள் கொடுத்து வழிபட்டனர். பின், கோயிலில் உள்ள மகாலட்சுமி கங்கா காவேரி சேது மாத தீர்த்தம் உட்பட 22 புண்ணிய தீர்த்தமான தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்கள் ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு அதிகளவில் வந்ததால் வாகன நெரிசல் தடுக்க போக்குவரத்து காவல்துறை மாற்று வழிச்சாலை செய்யப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பு கருதி, 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.