தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மாமியார், மருமகள் உணவு ஊட்டிக்கொண்டால் பில் இல்லை.. மகளிர் தின ஸ்பெஷல் ஆஃபர்.. எங்கே தெரியுமா? - ஈரோடு மாமியார் மருமகள் உணவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 12:59 PM IST

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கல்யாணசுந்தரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் மகளிர் தினத்தை முன்னிட்டு மாமியார், மருமகள் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி உணவை ஊட்டிக் கொள்ளும் போட்டி நடைபெறுகிறது. இம்மாதம் 6ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த போட்டியை நடத்த உணவக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாமியார் மற்றும் மருமகள் இருவரும், அன்பை பரிமாறும் வகையில் ஒருவருக்கு ஒருவர் உணவை ஊட்டிக்கொண்டால் அவர்கள் சாப்பிடும் உணவு முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்று உணவகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து உணவகத்தில் உரிமையாளர் பூபதி கூறுகையில், "கடந்த 2018ஆம் தேதியில் இருந்து இந்த போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொள்கின்றனர். இதன் மூலம் மாமியார் மற்றும் மருமகள் என்றாலே பிரச்னை என்கிற கண்ணோட்டம் மாறுகிறது. மேலும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் அன்பு அதிகரிக்கிறது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details