கோவையில் நடந்த சோகம்.. தாய் கண் முன்னே பேருந்தில் பாய்ந்த மகன்! - Coimbatore suicide attempt - COIMBATORE SUICIDE ATTEMPT
Published : Apr 26, 2024, 7:30 PM IST
கோயம்புத்தூர்: கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னையும் இருந்துள்ளது. இதன் காரணமாக, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவு அவரது தாய் லட்சுமி மற்றும் அவரது பாட்டி சியாமளா ஆகியோர் ஆனந்தை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி ம்ருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, மருத்துவமனைக்குச்ஹ் செல்வதற்காக கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி கங்கா மருத்துவமனை பேருந்து நிறுத்ததிற்கு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது, திடீரென ஆனந்த் அவ்வழியே துடியலூரில் இருந்து போத்தனூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் நகரப் பேருந்து முன்பாக பாய்ந்துள்ளார்.
இதில் பேருந்தின் முன்பக்க சக்கரம் ஏறியதால் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக கோவை மேற்கு சரக போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிய நிலையில், பார்வையாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.