தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

அம்பத்தூரில் பயங்கர தீ விபத்து: பல டன் கணக்கான எலக்ட்ரானிக் பொருட்கள் தீக்கிரையாகின

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 2, 2024, 7:29 AM IST

சென்னை: அம்பத்தூரில் எலக்ட்ரானிக் கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்யும் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சுமார் 10000 சதுரடியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பல டன் கணக்காண பற்றி எரிந்து தீக்கிரையாகின.

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 7-க்கு உட்பட்ட கருக்கு மேனாம்பேடு பகுதியில் எஸ். எஸ்.எஸ்.ஏஜென்சி செயல்பட்டு வருகிறது. இங்கு திறந்த வெளியில் சுமார் 10,500 சதுரடியில் எலக்ட்ரானிக் வேஷ்டுகளை மறு சுழற்சி முறையில் பிரித்து எடுக்கக்கூடிய செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு சென்னை மட்டுமல்லாது பல்வேறு இடங்களிலிருந்து பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோ ஓவன் மற்றும் இரும்பு லாக்கர்கள் மற்றும் ஏர் கூலர்கள், ஏசி இயந்திரங்கள் என பல நூறு டன் கணக்கில் பிரம்மாண்டமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள குடோனில் நேற்று (பிப்.1) மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு சிறிதளவு புகை வந்ததாக கூறப்படுகிறது. 

அதற்குப் பிறகு மளமளவென பற்றிய தீ, இந்த எலக்ட்ரானிக் கழிவுகளில் உள்ள எலக்ட்ரானிக் சிப் பரவி வெடித்து சிதறின. இந்த எலக்ட்ரானிக் கழிவுகளில் அம்மோனியா-சயனைடு, காப்பர், அலுமினியம் உள்ளிட்ட தாதுக்களும் உள்ளதனால், வண்ண வண்ணமாக வெடித்து எரிந்து அணைக்க முடியாத அளவிற்கு தீப்பற்றி எரிந்தது. இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை, ஆவடி, வில்லிவாக்கம், அண்ணா நகர், ஜே.ஜே.நகர் உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் 30-க்கும் மேற்பட்டோர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ கட்டுக்குள் அடங்காமல் மளமளவென பற்றி எரிந்து வந்ததால் அப்பகுதியின் சுற்றுவட்டாரமே புகை மண்டலமாக மாறியது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள மக்களுக்கு கண் எரிச்சல், தொண்டை எரிச்சல், மூச்சு திணறல் உள்ளிட்டவைகளும் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details