'மிஸ்டர் கொங்குநாடு' - ஆணழகன் போட்டியில் கலக்கிய சிறுவன்! - BODYBUILDING COMPETITION
Published : Oct 20, 2024, 8:11 PM IST
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தனியார் எஸ்டேட் மற்றும் பைஸ் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் திருப்பூர், கோவை, உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் 50 முதல் 75 கிலோ வரையிலான போட்டிகள் நடைபெற்றது.
அப்போது அனைவரும் தங்களது ஆணழக உடற்கட்டை அவரவர்களது பாணியில் காண்பித்து அசத்தினர். இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கிடையே இந்தப் போட்டியில் நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த மூன்றாவது வகுப்பு பயிலும் சிறுவன் ஆஷிக் கலந்து கொண்டார்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் தனது உடற்கட்டைக் காண்பித்து அசத்தினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அனைவரும் வியப்படைந்தனர். மேலும் சிறுவனை கைதட்டி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து சிறுவனுக்கு பதக்கமும் உடற்கட்டு வடிவிலான வெண்கலச் சிலை வழங்கப்பட்டது.
ஜிம்மிற்கு சென்று உடலைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு வந்து ஒவ்வொரு பாகங்களாக காண்பிப்பது கடினமான ஒன்று என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதனை அழகுற செய்து காட்டி இருக்கும் 3ஆம் வகுப்பு மாணவனைப் பலரும் பாராட்டி வருகின்றன.