சென்னை: தகவல்களை பரிமாறிக்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட செயலியான வாட்ஸ்அப், தற்போது அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருகிறது. முதலில் படித்தவர்களும், இளைஞர்களும் மட்டுமே பயன்படுத்தி கொண்டிருந்த வாட்ஸ்அப்-ஐ இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப்பை பயன்படுத்தாத ஆட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அனைவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வருகின்றனர்.
அதற்கேற்றவாறு வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும், வாட்ஸ்அப் பயனாளர்களுக்காக புதுப்புது அப்டேட்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. மெசேஜ் செய்வதற்காக தொடங்கப்பட்ட செயலியில், தற்போது வாய்ஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ், வாய்ஸ் ஸ்டேட்டஸ், வீடியோ கால், வாய்ஸ் கால், பணப்பரிமாற்றம், வாட்ஸ் அப் சேனல்கள், ஸ்டிக்கர், வாக்கெடுப்பு (Polls) என பல சேவைகள் உள்ளன. சமீபத்தில் ஒரு வாட்ஸ்அப் செயலியில் இரண்டு அக்கௌண்ட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற வசதி வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
இது மட்டுமில்லாமல், இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடும் போது குறிப்பிட்ட சிலரை டேக் (Tag) செய்து வைப்பது போல், வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ் போடும் போது, குறிப்பிட்ட சிலரை டேக் செய்து வைக்கும் வசதி, இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட ஸ்டோரிக்கு ரியாக்ட் செய்யும் வசதி இருப்பது போல், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்க்கும் ரியாக்ட் செய்யும் வசதி, ஆண்ட்ராய்ட் மொபைல்களில் இருக்கும் நியர்பை சேர் (Near By Share) வசதி போன்று வாட்ஸ் அப்பிலும் இன்டர்நெட் வசதி இல்லாமல் போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரும் வசதி போன்றவற்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளன.