தொழில்நுட்ப உலகத்தில் உச்ச பிரீமியம் ஸ்மார்ட்போன்களாக வலம்வரும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா ஆகிய மாடல்களை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆண்ட்ராய்டு, iOS என இயங்குதளத்தை தவிர்த்து தான் இந்த போன்களை நாம் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். இதற்கு காரணம், சில பயனர்கள் தனிப்பட்ட இயங்குதளத்திற்கு ஆதரவாக இருப்பர். இவர்களால் மாற்று இயங்குதளத்தை சிந்தித்துக் கூட பார்க்க முடியாது. எனவே, ‘OS ஒரு பொருட்டல்ல’ என்று நினைக்கும் பயனர்களுக்கு இந்த ஒப்பீடு பயனுள்ளதாக இருக்கும்.
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் Vs சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா விலை:
இதில் ஒரு படி மேலாக நிலைகொண்டுள்ளது சாம்சங் அல்ட்ரா மொபைல். சாம்சங் ஆன்லைன் வர்த்தக தளத்தில் தற்போது கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அடிப்படை மாடல் விலை ரூ.1,21,999 ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ.12,000 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. அப்படி பார்த்தால் சாம்சங் போனை வெறும் ரூ.1,09,000 என்ற விலையில் பயனர்கள் வாங்க முடியும்.
மறுமுனையில் இருக்கும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அடிப்படை மாடல் இந்திய விலை ரூ.1,44,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சில வங்கிக் கடன் அட்டைகளுக்கு ரூ.5,000 கேஷ்பேக் வழங்கப்படுவதால், ஆப்பிள் போனை நாம் ரூ.1,39,900 என்ற விலையில் வாங்கலாம். மதிப்பை வைத்து பார்க்கும்போது சாம்சங் தனது நிலையை உறுது செய்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Apple iPhone 16 Pro Max Specification):
- ஆப்பிள் ஏ18 ப்ரோ சிப்செட்
- 6.9-இன்ச் OLED 120Hz டிஸ்ப்ளே
- 256ஜிபி ஸ்டோரேஜ் முதல் தொடங்குகிறது
- 8ஜிபி ரேம்
சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா அம்சங்கள் (Samsung Galaxy S24 Ultra Specification):
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்
- 6.8-இன்ச் OLED 120Hz டிஸ்ப்ளே
- 256ஜிபி ஸ்டோரேஜ் முதல் தொடங்குகிறது
- 12ஜிபி ரேம்
இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல என்பது போல, ஆப்பிள் தனது பிரத்யேக சொந்த ஏ18 ப்ரோ சிப்செட்டையும், சாம்சங் மூன்றாம் தரப்பு சிப்செட் தயாரிப்பாளரான குவால்காம் வசமிருந்து ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டையும் கொண்டுள்ளன. இரண்டும் செயற்கை நுண்ணறிவு புதுப்பிப்புகளுக்கு இணங்க திறன்பட இயங்கும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் சந்தைக்கு புதிது என்பதால், அதன் திறனை அறிந்துகொள்ள இன்னும் சில நாள்கள் தேவைப்படும்.
- இதையும் படிங்க: ஐபோன் 16 மீதுள்ள கண்களை கவர்ந்த ஹுவாவே - ஒன்று ரெண்டல்ல; மூன்று மடிப்பு ஸ்மார்ட்போன் அறிமுகம்!
ஆனால் இங்கு பிரதான காரியம் என்னவென்றால், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் போனில் கொடுக்கப்பட்டிருக்கும் A18 ப்ரோ சிப்செட் 3 nm தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டதாகும். அதேவேளை சாம்சங் போனில் இருக்கும் ஸ்னாப்டிராகன் சிப்செட் 4nm தொழில்நுட்பத்தால் ஆனதாகும். அதைத் தவிர்த்து இரண்டு சிப்செட்டுகளும் புதிய மற்றும் மேம்பட்ட ப்ளூடூத், ஸ்டோரேஜ், டேட்டா டிராஸ்பர் இயக்கமுறைகளுடன் கட்டமைக்கப்பட்டதாகும்.
சாம்சங்கின் ஜூம் கேமராவுக்கு ஈடுகொடுக்குமா ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்: