தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

வெறும் 9999 ரூபாய்க்கு அறிமுகமானது Samsung Galaxy A06.. இதன் ஸ்பெஷிபிகேஷன்கள் என்ன தெரியுமா? - Samsung Galaxy A06 - SAMSUNG GALAXY A06

Samsung Galaxy A06 Launched In India: புதிதாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி A06 போனின் விலை, சிறப்பம்சங்கள் போன்ற பல்வேறு விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

சாம்சங் கேலக்ஸி A06
சாம்சங் கேலக்ஸி A06 (Credits - Samsung)

By ETV Bharat Tech Team

Published : Sep 4, 2024, 8:27 PM IST

ஹைதராபாத்: இன்றைய காலத்தில் சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இதனாலேயே ஸ்மார்ட்போன்களின் சந்தையில் பல முன்னணி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டியும் உள்ளது.

இதுபோன்ற காரணங்களால் அனைத்து நிறுவனங்களும் அவ்வப்போது லேட்டஸ்ட் வெர்ஷன்களில் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்ட வன்னமாக உள்ளன. வாடிக்கையாளர்களின் ரசனை மற்றும் அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப கவர்ச்சிகரமான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வெளியிடப்படுகிறது.

அந்தவகையில், முன்னணி மின்னணு தயாரிப்பு நிறுவனமான சாம்சங் தனது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தற்போது வழங்கியுள்ளது. சாம்சங் நிறுவனம் கவர்ச்சிகரமான வடிவமைப்புடன் Galaxy A06 என்ற புதிய மொபைலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது 10 ஆயிரம் ரூபாய் என்ற ஆரம்ப விலையில் விற்க்கப்படௌள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3 நிறங்களில் வெளிவந்துள்ளது. இந்த போன் One UI6 அடிப்படையில் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், Galaxy A06 ஆனது microSD அட்டையின் உதவியுடன் 1TB வரை தனது சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதியைக் கொண்டுள்ளது. இத்தகை வசதிகொண்ட இந்த போனின் ஸ்பெஷிபிகேஷன்கள், பேட்டரி பேக்கப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

சாம்சங் கேலக்ஸி A06 ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • டிஸ்பிலே - 6.7 இன்ச் HD+ PLS LED திரை
  • ப்ராசஸ்சர் - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85
  • பின்புற கேமரா - 50MP
  • முன்புற கேமரா - 8MP
  • டெப்த் சென்சார் - 2MP
  • பேட்டரி - 5,000mAh
  • சார்ஜிங் கெப்பாசிட்டி - 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
  • 4ஜி
  • வைஃபை
  • புளூடூத் 5.3, 3.5 மிமீ ஆடியோ ஜாக்
  • USB டைப் - C போர்ட்

ரேம் மற்றும் ஸ்டோரேஜ்:

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி A06 ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது.

  • 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ்
  • 4GB ரேம் +128GB ஸ்டோரேஜ்

நிறங்கள்:

  • பிளாக் (Block)
  • கோல்ட் (Gold)
  • லைட் புளூ (Light blue)

விலை:

  • 4GB ரேம் + 64GB ஸ்டோரேஜ் விலை - ரூ.9,999
  • 4GB ரேம் +128GB ஸ்டோரேஜ் விலை - ரூ.11,499

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:இவ்வளவு கம்மி விலையில இத்தனை ஸ்பெஷிபிகேஷன்களா?.. 3D AMOLED Display உடன் களமிறங்கிய Vivo T3 Pro 5G சிறப்பு என்ன?

ABOUT THE AUTHOR

...view details