சென்னை: ஓப்போ (OPPO) நிறுவனத்தின் துணை நிறுவனமாக உலக ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்கி, அதன் பின்னர் தனியொரு பிராண்டாக உருவான, உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன நாட்டைச் சேர்ந்த மின்னணு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான 'ரியல்மி' (Realme), அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளது.
அந்த வகையில், தற்போது ரியல்மி நிறுவனம் தங்களது 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களான ரியல்மி 13 பிளஸ் 5ஜி (Realme 13 Plus 5G) மற்றும் ரியல்மி 13 5ஜி (Realme 13 5G) என இரண்டு மாடல்களை இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் வெளியிட்டுள்ளது. இதில் ரியல்மி 13 பிளஸ் 5ஜி போன் வீடியோ கேம் பிரியர்களுக்காக புதிய கேமிங் அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்:
- 120Hz OLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 7300 எனர்ஜி ப்ராசஸர் 5G சிப்செட்
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- 8GB ரேமுடன் கூடிய 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB/12GB ரேமுடன் கூடிய 256GB ஸ்டோரேஜ்
- 6050mm ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் VC கூலிங் ஏரியா
- ஃபாஸ்ட் கனெக்சன் WiFi 6 மற்றும் ப்ளூடூத் 5.4
- 2.5GHz ஓக்டா-கோர் CPU
- LPDDR4X+UFS 3.1 எஃப்சியண்ட் டிரான்ஸ்மிஷன்
கேமரா:
- பின்பக்கம் - 50mp Sony Lyt 600 மெயின் கேமரா மற்றும் 2mp மோனோகுரோம் சென்சார் கேமரா
- செல்ஃபி கேமரா - 16mp கொண்டுள்ளது