தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

பாய்ந்து சென்ற சில நிமிடங்களில் எலும்புக்கூடான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! - Ola S1 Pro Fire Accident

Ola S1 Pro Scooter Fire: திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் வைத்து ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர் எரிந்து நாசமான சம்பவம், அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Ola S1 Pro gen 2 catches fire near karur
சாலையில் பற்றி எரிந்து எலும்புக்கூடான ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர். (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tech Team

Published : Sep 25, 2024, 4:42 PM IST

கரூர்:கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் இன்று (செப்டம்பர் 25) காலை இரண்டாம் தலைமுறை ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர் (Ola S1 Pro - Gen 2 Electric Scooter) திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.

சமீபகாலமாக மின்சார வாகனங்கள் படையெடுத்து வெளியாகி வரும் நிலையில், அவை ஆங்காங்கே எரிந்து நாசமாவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த சூழலில் இந்த சம்பவம் ஓலா வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை லட்சம் நாசம்!

கரூர் வெள்ளியணை அருகே உள்ள காட்டேரிகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மகன் தினேஷ்குமார் (26) என்பவர் ஏப்ரல் மாதத்தில் புதிய ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் (ரூ.1,50,000) கொடுத்து வாங்கியுள்ளார்.

எரிந்து நாசமான ஓலா பைக் குறித்த பரிவாகன் தகவல். (ETV Bharat Tamil Nadu)

இந்த சூழலில், இன்று காலை 9 மணியளவில் தனது ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு, வெள்ளியணையில் இருந்து, சேலம் புறவழிச்சாலை வழியாகப் புகழூர் வேலாயுதம்பாளையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, திருக்காம்புலியூர் மேம்பாலத்தில் வாகனத்தில் புகை வருவதைக் கண்டு உடனடியாக அங்கே ஓரமாக நிறுத்தியுள்ளார்.

தீப்பிடித்து எரிந்த ஓலா எஸ்1 ப்ரோ மின்சார பைக்:

கண் இமைக்கும் நேரத்தில், அவரது ஓலா ஸ்கூட்டர் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. 'உயிர் பிழைத்தோம்...' என்ற ஆறுதலுடன் உடனடியாக விபத்து குறித்து கரூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்த தீயணைப்புத்துறை வாகனம் (ETV Bharat Tamil Nadu)

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். எனினும், மின்சார பைக் மோசமாக எரிந்த நிலையில், எலும்புக்கூடு போல் காணப்பட்டது.

எலும்புக்கூடாகக் கிடந்த ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர். (ETV Bharat Tamil Nadu)

இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணி காவல்துறையினர், போக்குவரத்தை சரி செய்தனர்.

இதையும் படிங்க:

  1. மாருதி ஸ்விஃப்ட் CNG 2024: மூன்று ஆப்ஷன்கள், சிறந்த மைலேஜ், பட்ஜெட் விலை! - New Maruti Swift CNG Mileage
  2. முத்ரா கடன்: ரூ.10 லட்சம் வரை எளிதில் கடன்; எப்படி விண்ணப்பிப்பது! - mudra loan online apply
  3. கடுப்பான பிளிப்கார்ட் வாடிக்கையாளர்கள்: சலுகையில் மோட்டோ ஜி85 போன்... ஆர்டர்களை ரத்துசெய்த நிறுவனம்! - Flipkart Scam

மேலும், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரை 'ஓலா' நிறுவனமும் எந்த உரிய விளக்கத்தையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. முறையான பராமரிப்புடன் வாகனத்தை இயக்கினால் மட்டுமே, இதுபோன்ற ஆபத்தான சூழல்களைத் தவிர்க்க முடியும் என பைக் பழுது பார்க்கும் நபர்கள் கூறியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details