இன்பினிக்ஸ் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி (Infinix Zero Flip 5G) போனை அக்டோபர் 17-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. கூகுள், மோட்டோரோலா, சாம்சங், ஒப்போ போன்ற பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில், இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் போன் மலிவு விலையில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன், இன்பினிக்ஸ் தங்களின் புதிய ஜீரோ 40 5ஜி ஸ்மார்ட்போனை டெக் சந்தையில் அறிமுகம் செய்தது. அதில், IR ரிமோட், Folax அசிஸ்டன்ட், JBL ஸ்பீக்கர்ஸ், இன்பினிக்ஸ் AI என பல அம்சங்களை நிறுவனம் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் 5ஜி மொபைலின் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
- மடிக்கக்கூடிய அமோலெட் (AMOLED) திரை: 6.75-அங்குல (inch) அமோலெட் திரையுடன் 120Hz புதுப்பிப்பு வீதம் (Refresh Rate)
- சக்திவாய்ந்த கேமரா: 32 மெகாபிக்சல் (MP) செல்ஃபி கேமரா, 50 மெகாபிக்சல் பிரதான கேமரா (OIS உடன்), 3 மெகாபிக்சல் டெப்த் சென்சார்.
- வேகமான செயல்திறன்: மீடியாடெக் டிமென்சிட்டி 8020 (MediaTek Dimensity 8020) சிப்செட் கொண்டு இயக்கப்படும்.
- பேட்டரி ஆயுள்: 4,000 mAh பேட்டரி, 45W வேகமான சார்ஜிங் வசதி
- மென்பொருள்: ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தில் கட்டமைக்கப்பட்ட XOS 13 ஸ்கின்.
- பிற அம்சங்கள்: கைரேகை சென்சார், NFC, வைஃபை, ப்ளூடூத்
இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் யாருக்கு ஏற்றது?
புதிய தொழில்நுட்பத்தை விரும்புபவர்கள் இது சிறந்த தேர்வாக இருக்கும். மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அனுபவத்தை மலிவு விலையில் அவர்கள் பெறலாம். ஸ்டைலான அல்லது கவர்ச்சிகரமான புதுமை விரும்பிகளுக்கு இன்பினிக்ஸ் ஜீரோ பிளிப் மொபைல் ஏற்றதாக இருக்கும். முக்கியமாக செல்ஃபி பிரியர்களுக்கு இந்த போன் சற்றே அதிகமாகப் பயன்படலாம். ஏனென்றால் பின்புற பெரிய கேமரா வாயிலாக செல்ஃபி படங்களை எடுக்க முடியும்.