ஹைதராபாத்:மஹிந்திரா தார் (Mahindra Thar) முதன்முதலில் 2010ஆம் ஆண்டில் மஹிந்திரா லெஜெண்டின் நவீனமயமாக்கப்பட்ட பதிப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு 4x4 டிரைவ் வசதி கொண்ட ஆஃப்-ரோடு எஸ்யூவி ஆகும். இது 1980களில் இருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மஹிந்திரா MM 540 வாகனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகப்பட்டதாகும். இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் கரடுமுரடான நிலப்பரப்பைக் கையாளக்கூடிய கரடுமுரடான, நம்பகத்தன்மையான மற்றும் விலை குறைவான ஆஃப்-ரோடு வாகனமாக தார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் (Mahindra Thar) முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதும், மோட்டார் ஆர்வலர்களை முதல் பார்வையிலேயே, தாரை காதலிக்க வைத்தது. இதனால் இந்திய சாலைகளில் ஆதிக்கம் செலுத்தும் காராக மஹிந்திரா தார் பிரபலமடைந்தது. அந்த வகையில், மஹிந்திரா நிறுவனம் தனது தார் ராக்ஸ் (Thar ROXX) காரை தற்போது இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விற்பனையாகி வந்த மூன்று டோர் கொண்ட காரின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக, இந்த ஐந்து டோர் கொண்ட தார் ராக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தார் ராக்ஸ் அப்டேட்: மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) காரைப் பொறுத்தவரை, மஹிந்திரா தார் போன்று அல்லாது, இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் ஆகியவற்றில் ஏகப்பட்ட அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, இந்த காரின் முன் பக்கம் LED ஹெட் லைட் மற்றும் C வடிவ டிஆர்எல் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கிரில் பகுதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பானட் பகுதி மட்டும் பழைய மஹிந்திரா தார் போலவே அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக, பின்பக்க சீட்டுகளுக்கு தனிக்கதவுகள் வழங்கப்பட்டு, ஐந்து டோர் கொண்ட தாராக அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
வேரியண்ட்கள் மற்றும் நிறங்கள்:புதிதாக அறிமுகமாகியுள்ள இந்த மஹிந்திரா தார் ராக்ஸ் MX1, MX3, MX5, AX3L, AX5L, AX7L என 6 வேரியண்ட்களில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், மேனுவல் டிரான்மிஷன், பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின், 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் ஆகிய அம்சங்களுடன் விதவிதமான காம்பினேஷன்களில், ஸ்டெல்த் பிளாக் (Stealth Black), டீப் ஃபாரஸ்ட் (Deep Forest), பெர்ன்ட் சியன்னா (Burnt Sienna), நெபியூலா ப்ளூ (Nebula Blue), டாங்கோ ரெட் (Tango Red), பேட்டில்ஷிப் கிரே (Battleship Grey), எவரெஸ்ட் வொய்ட் (Everest White) என ஏழு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ் MX1: தார் ராக்ஸ் மாடலில் குறைவான விலை கொண்ட பேஸ் வேரியண்ட் இந்த தார் ராக்ஸ் MX1 தான். இந்த பேஸ் வேரியண்டில், LED லைட்டிங், டூயல்-டோன் வெளிப்புற நிறம், 18-இன்ச் ஸ்டீல் வீல்கள், 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், டிரைவர் டீச் ஹீட் அட்ஜஸ்ட்மென்ட், 60:40 ஸ்பிளிட், ஃபோல்டிங் பின்பக்க சீட், பின்பக்க ஏசி வென்ட்கள், பின்பக்க USB C சார்ஜிங் போர்ட் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமல்லாது, இந்த வேரியண்டில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், ESC, அனைத்து பயணிகளுக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வேரியண்டானது 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆகிய இரண்டு என்ஜின்களுடனும் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும், ரியர் வீல் டிரைவ் வசதியை மட்டுமே இந்த பேஸ் வேரியண்ட் கொண்டிருக்கிறது. விலையைப் பொறுத்தவரையில், MX1 பெட்ரோல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.12.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX1 டீசல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.13.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ் MX3: இந்த தார் ராக்ஸ் MX3 வேரியண்டில், MX1 வேரியண்டில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகளுடன் கூடுதலாக, ஸிம் மற்றும் ஸூம் ஆகிய இரண்டு டிரைவிங் மோடுகள், ஸ்னோ, சேண்டு மற்றும் மட் ஆகிய மூன்று டெரைன் மோடுகள், ரியர் கேமரா, ஹில் அஸன்ட் மற்றும் டிஸன்டு அசிஸ்ட், ட்ராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ரியர் சீட் ஆர்ம்ரெஸ்ட், ஆட்டோ டிம்மிங் IRVM, வயர்லெஸ் ஆண்டராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஸ்மார்ட்போன் சார்ஜிங் ஆகிய வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த MX3 வேரியண்டிலும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், பெட்ரோல் என்ஜினுடன் ஆட்டோடமேடிக் கியர்பாக்ஸ் தேர்வும், டீசல் என்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
தார் ராக்ஸ் MX3 பெட்ரோல் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.14.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX3 டீசல் மேனுவல் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.15.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், MX3 டீசல் ஆட்டோமேட்டிக் 2 வீல் டிரைவ் வேரியண்டானது ரூ.17.49 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.