டெல்லி :தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த இஸ்ரே தலைவர் சோம்நாத், ஆதித்யா எல்1 செய்ற்கைகோள் விண்ணில் செலுத்திய போது தனக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட போதே தனக்கு உடல் நலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், இருப்பினும், அந்த நேரத்தில் அதைப் பற்றிய தெளிவான புரிதல் தனக்கு இல்லை என்றும் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி சூரியன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ல ஆதித்ய எல்1 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த நாளில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட சிறிது நாட்களில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சூரியன் குறித்து ஆராய் ஆதித்ய எல்1 விண்கலத்தை விண்ணி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும், புற்றுநோய் கண்டறியப்பட்டதை இஸ்ரோ தலைவர் சோம்நாத் அடுத்து 5 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதைத் தொடர்ந்து கிமோதெரபி சிகிச்சையும் அவர் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து மேலும், பேசிய அவர், புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது தனது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், ஆனால் தப்போது, புற்றுநோயையும் அதன் சிகிச்சையையும் ஒரு தீர்வாக உணர்வதாகவும் அவர் தெரிவித்தார்.