சென்னை: இந்தியா சர்வதேச அளவில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் பருவமழை பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், தற்போது பல்வேறு மாநிலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பால் ஏராளமான வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை பெரும் சேதம் அடைகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளை தாக்குப்பிடிக்கும் வகையில், சிறந்த வாட்டர் வேடிங் கெப்பாசிட்டி (Water Wading Capacity) அமைப்புடன் வடிவமைக்கப்பட்ட சில SUV வகை கார்கள் இந்திய மோட்டார் சந்தையில் விற்பனையாகிறது. அவற்றில் ஐந்து SUV கார்களின் பட்டியலை இங்கே காணலாம்.
மஹிந்திரா தார் (Mahindra Thar): இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்நாட்டு தயாரிப்பான மஹிந்திரா நிறுவனத்தின் தார் தான் உள்ளது என்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால், பட்டியலில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடும்போது, மஹிந்திரா தார் மிகக் குறைந்த வாட்டர் வேடிங் கெபாசிட்டியைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். அந்த வகையில், 650மிமீ வரை வாட்டர் வேடிங் கெப்பாசிட்டி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த எஸ்யூவி ஆன்-ரோடிங்கிற்கும், ஆஃப்-ரோடிங்கிற்கும் ஏற்ற காராக மாறுகிறது. வயநாடு வெள்ள பாதிப்பின்போது மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மீட்புப் பணியில் பெரும்பங்காற்றியது குறிப்பிடத்தக்கது
ஃபோர்ஸ் கூர்க்கா (Force Gurkha): மஹிந்திரா தாரை விட 50 மிமீ அதிகமாக 700 மிமீ வாட்டர் வேடிங் கெபாசிட்டியைப் பெற்றுள்ள கரடுமுரடான தோற்றம் மற்றும் வலிமையான செயல்திறனுடைய ஃபோர்ஸ் கூர்க்காதான் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆஃப்-ரோடிங் மற்றும் தண்ணீர் நிறைந்த பகுதிகளில் செல்வதற்கும் ஏற்றதாக இந்த கார் உள்ளது. இது மட்டுமின்றி, இதன் வாட்டர் வேடிங் கெப்பாசிட்டி மற்றும் இதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்நோர்கெல் (Snorkel) காரணமாக, வெள்ளநீர் நிறைந்த சாலைகளில் மிக எளிதாகச் செல்ல முடியும்.
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner): ஆடம்பரம் மற்றும் செயல்திறனுக்காகவே டொயோட்டா ஃபார்ச்சூனர், கார் பிரியர்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஃபோர்ஸ் கூர்க்காவிற்கு சமமாக 700 மிமீ வாட்டர் வேடிங் கெபாசிட்டியைப் பெற்றுள்ளது டொயோட்டா ஃபார்ச்சூனர். டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களின் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஃபார்ச்சூனர் 4x2 மற்றும் 4x4 என்ற இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. மேலும், ஃபார்ச்சூனரின் வலுவான வடிவமைப்பும், அடித்தளமும் சாலைக்கு வெளியேயும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடப்பதற்கும் ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளது.