இந்திய ரயில்வே துறையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் புதியத் திட்டத்தைக் குறித்து ஒன்றிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுற்றுப்புறச் சூழலை மாசுப்படுத்தாத ஹைட்ரஜன் ஃப்யூல் செல்களைக் (ஹைட்ரஜன் எரிபொருள்) கொண்டு ரயில்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஹைட்ரஜன் ரயில்களை (Hydrogen Train) இயக்கும் திட்டத்தில், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இந்தியா ஐந்தாவது நாடாகச் சேர்ந்துள்ளது.
தற்போதுள்ள டிஇஎம்யூ (டீசல் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்) ரயில்களில் ஹைட்ரஜன் எரிபொருள் கலத்தை மீண்டும் பொருத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டமாக அரசு இதைக் கொண்டுவந்துள்ளது. ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ரயிலை மாதிரி சோதனையாக வடக்கு ரயில்வே மண்டலத்தின் கீழுள்ள ஹரியானாவின் ஜின்ட்-சோனிபட் இடையில் ஹைட்ரஜன் ரயில்கள் டிசம்பர் மாதத்தில் இயக்கப்பட உள்ளது.
ஹைட்ரஜன் எரிபொருள் (Hydrogen Fuel) என்றால் என்ன?
ஹைட்ரஜன் ஒரு சுத்தமான எரிபொருளாகும். பெட்ரோல், டீசல் போன்ற பிற எரிபொருள்கள் புகையை வெளியிடும். ஆனால் ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும்போது, தண்ணீரை மட்டுமே வெளியிடும். இயற்கை எரிவாயு, அணுசக்தி, பயோமாஸ் மற்றும் சூரிய மற்றும் காற்று போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற பல்வேறு உள்நாட்டு வளங்களில் இருந்து ஹைட்ரஜனை உற்பத்தி செய்யலாம்.
எனவே, இந்த புதுப்பிக்கத்தக்க இயற்கை எரிசக்தியின் பயன்பாடு போக்குவரத்து வாகனங்கள், வீடுகள், மின்சார உற்பத்தி என பல இடங்களில் பயன்படுத்தலாம். இதனால், கார்பன் உமிழ்வை குறைந்து காற்று மாசை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தயார் நிலையில் சென்னை ஐசிஎஃப்:
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ரயில் திட்டத்தை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேரில் கவனித்து வருகிறார். இதன் மாதிரி ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை, சென்னை பெரம்பூரில் உள்ள அரசு ரயில் பெட்டித் தயாரிக்கும் தொழிற்சாலையான இன்டகிரல் கோச் ஃபேக்டரி (ICF / ஐசிஎஃப்) வசம் ரயில்வே துறை ஒப்படைத்துள்ளது.
இது ஏன் முக்கியமானது?