தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / technology

ஹூண்டாய் வென்யூ அட்வெஞ்சர் எடிஷன்: வெறும் ரூ.15,000 தான் அதிகம்! - Hyundai Venue Adventure Edition

இந்தியாவில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஹூண்டாய் வென்யூ காரின் அட்வெஞ்சர் எடிஷனை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

Hyundai Venue Adventure Edition car launch
ஹூண்டாய் வென்யூ அட்வெஞ்சர் எடிஷன் (Credits: ANI)

By ETV Bharat Tech Team

Published : Sep 17, 2024, 4:35 PM IST

இந்திய சாலைகளில் கியூட்டாக அலைந்து திரியும் ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் காரின் புதிய மாடல் வெளியாகியுள்ளது. ஹூண்டாய் வென்யூ அட்வெஞ்சர் எடிஷன் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய காரின் விலை பழைய மாடலை விட சற்று அதிகமாக இருக்கிறது. அதன்படி ரூ.15,000 அதிகரிக்கப்பட்டு, ரூ.10.15 லட்சம் எனும் எக்‌ஷ்-ஷோரூம் விலைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

இதில் புதிய ரேஞ்சர் காக்கி நிறம் மற்றும் பல உள் மற்றும் வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பதிப்பு S(O)+, SX மற்றும் SX(O) என மூன்று வகைகளில் கிடைக்கிறது. இந்த மாடல்கள் அனைத்தும் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களிலேயே கிடைக்கின்றது. இதே வகை புதிய எடிஷன் கார்கள் கிரெட்டா மற்றும் அல்கசார் எஸ்யூவி (SUV) மாடல்களிலும் முன்பு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய அம்சங்கள் என்ன:

வென்யூ அட்வெஞ்சர் பதிப்பு, புதிய ரேஞ்சர் காக்கி நிறம் உடன் பல புதிய அம்சங்களை கொண்டுள்ளது. அலாய் வீல்ஸ், முன்புற மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள், ரூப் ரெயில்ஸ், சைடு கிளாடிங், விங் மிரர்ஸ் மற்றும் ஷார்க் ஃபின் ஆன்டெனா ஆகியவை எல்லாம் கறுப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. முன்புற பிரேக் காலிபர்கள் சிகப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன்புற ஃபெண்டரில் ‘அட்வெஞ்சர் இலச்சினை’ (Adventure Emblem) மற்றும் கறுப்பு நிற ஹூண்டாய் லோகோ கொடுக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ அட்வெஞ்சர் எடிஷன் பின்புற தோற்றம் (Credits: ANI)

வெளிபுறத்தில் இருக்கும் கறுப்பு நிறம் காரின் உள்ளே வரைப் பயணிக்கிறது. இது பழைய மாடல் வென்யூ உள்ளமைப்பை நினைவுபடுத்தினாலும், சில இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள காக்கி பச்சை நிறம் ஒரு புதுமையை பரிசாக்கியுள்ளது. புதிய 3டி தரை விரிப்புகள், ஸ்போர்ட்டி லுக்கில் கொடுக்கப்பட்டுள்ள பெடல்கள் கூடுதல் சிறப்பு. டாஷ்போர்டில் இரண்டு கேமராக்களுடன் கூடிய டாஷ்கேம் சேர்க்கப்பட்டுள்ளது.

வென்யூ அட்வெஞ்சர் பவர் டிரெயின் ஆப்ஷன்கள்:

வென்யூ அட்வென்ச்சர் பதிப்பு இரண்டு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. அவை 83 hp திறன்கொண்ட 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 120 hp திறன்கொண்ட 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகியவை ஆகும். 1.2 லிட்டர் எஞ்சின் S(O)+ மற்றும் SX மாடல்களில் இடம்பெறும்.

அதேநேரம், டர்போ பெட்ரோல் என்ஜினுடன் SX(O) மாடல் மட்டுமே கிடைக்கும். இது 7 ஸ்பீட் டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷனுடன் கொடுக்கப்பட்டுள்ளது. டீசல் மாடல்களில் இந்த பதிப்பு கிடைக்காது என்பது நினைவுகூரத்தக்கது. புதிய வென்யூ பிரத்யேக ரேஞ்சர் காக்கி நிறத்துடன், கூடுதலாக மூன்று வண்ண விருப்பங்களைக் கொண்டுள்ளது.

அதன்படி, அபீஸ் பிளாக், அட்லஸ் வைட், டைட்டன் கிரே ஆகிய மூன்று நிறங்களும் இந்த எடிஷனுடன் சேர்க்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கறுப்பு ரூஃப் டூயல் டோன் கலரில் கிடைக்கிறது. SX மற்றும் SX(O) டூயல் டோன் மாடல்களுக்கு கூடுதலாக ரூ.15,000 மட்டுமே செலவு செய்தால் போதும் என்பது ஹூண்டாய் நிறுவனத்தின் வர்த்தக வாதமாக உள்ளது..

இதையும் படிங்க: iOS 18 உடன் வரும் ஆப்பிள் ஐபோன் 15: அமேசானில் 31,000 ரூபாய் தான்; எப்படி வாங்குவது?

ABOUT THE AUTHOR

...view details