ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகி டெக் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளன. இந்த சூழலில் பல பயனர்களும் முந்தைய ஐபோன் 15 மாடல் விலை குறித்தான தேடலில் இருக்கின்றனர். புதிய மாடல் போன் அதிக விலை இருக்கும் என்பதால், ஐபோன் 12, 13 மாடல் பயன்படுத்தும் நபர்கள் டைப்-சி உடன் வரும் ஐபோன் 15 மாடலுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்ள தயாராகின்றனர். அவர்கள் தேடலை நிவர்த்தி செய்யும் வகையில் பிளிப்கார்ட் தளம், ஐபோன் 15 (iPhone 15) மாடலுக்கான விலையைக் குறைத்து, வங்கி சலுகைகளையும் அறிவித்துள்ளது.
ஐபோன் 15 அம்சங்கள் (iPhone 15 Specifications):
முந்தைய மாடல் ஆப்பிள் ஐபோன் 15 ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஐஓஎஸ் 17 (iOS 17) இயங்குதளம் இயக்குகிறது. இதில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே டைனமிக் ஐலாண்ட் (Dynamic Island) உடன் இருக்கிறது. கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் OIS வசதியுடன் கூடிய 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் கேமரா ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.
செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 12 மெகாபிக்சல் கேமரா டிஸ்ப்ளே டைனமிக் ஐலேண்டில் நிறுவப்பட்டுள்ளது. முக்கியமாக முதல்முதலாக ஐபோன் 15 மாடலில் தான் டைப்-சி சார்ஜிங் ஆதரவு கொண்டுவரப்பட்டது. இதன் வாயிலாக போனை 20W திறனுடன் சார்ஜ் செய்ய முடியும். மேலும், பல வேலைகளை எளிதாக்கும் ஆக்ஷன் பட்டன் இதில் உள்ளது. பல செயலிகளை இந்த பட்டன் வாயிலாக ஒரே கிளிக்கில் பயன்படுத்தலாம். கறுப்பு, நீலம், பச்சை, மஞ்சள், பிங்க் என மொத்தம் ஐந்து வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கலாம்.