ETV Bharat / state

'தலைக்கனம் வேண்டாம்; தமிழகம் பொறுக்காது'.. மத்திய அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை! - UDHAYANIDHI STALIN WARNS UNION GOVT

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி தர முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (Udhay X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 16, 2025, 3:41 PM IST

சென்னை: சென்னை: புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி தர முடியாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்வின்போது செய்தியாளர் சந்திப்பில் நேற்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், மத்திய கல்வித்துறை அமைச்சரின் இந்தக் கருத்தை வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது.

நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா?

தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும்.

மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம்.

தமிழ்நாடு பொறுக்காது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.