வாஷிங்டன் (அமெரிக்கா): நாம் வாழும் பூமி அமைந்துள்ள பிரபஞ்சம் கற்பனைக்கு எட்டாத பல்வேறு அதிசயங்களை உள்ளடக்கியது. சூரியனைச் சுற்றி வருவதை கோள்கள் என்றும், கோள்களை சுற்றி வருவதை துணை கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. அதன்படி பூமியை நிரந்தரமாக சுற்றி வரும் பூமியின் துணைக்கோள் தான் நிலவு. இதுவரை பூமிக்கு ஒரே ஒரு துணைக்கோள் தான் உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த நிலையில், ஒரு பள்ளி பேருந்தின் அளவுள்ள சிறிய கோள் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு வரப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு 'மினி நிலா' என்றும் பெயரிட்டுள்ளனர். இதனால் பூமியில் இருந்து 2 நிலவுகள் தெரியும். இந்த மினி நிலா இன்று (செப்.29) பூமிக்கு அருகில் வர உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே பூமியை சுற்றி வரும் என்றும் ஆராய்ச்சியார்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க:ஆர்டிக் பனிக்கும் ஆண்டிப்பட்டி மழைக்கும் தொடர்பு இருக்கா? தேசியப் பெருங்கடல் ஆய்வு மையத்தின் ஆய்வுகள் என்ன? - NIOT Artic Sea Research
'2024 பிடி5' (2024 PT5) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோளை, தென்னாப்பிரிக்கா சதர்லேண்டில் உள்ள மாட்ரிட் பல்கலைக்கழத்தில் விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த தொலைநோக்கியை பயன்படுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் கண்டுபிடித்துள்ளனர்.
மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் விஞ்ஞானி ரிச்சர்டு பின்சில், “இந்த குறுகிய கால நிலவு மிகவும் பொதுவானது. கடைசியாக கடந்த 2020இல் ஒன்று கண்டறியப்பட்டது. இவை மிகவும் சிறியவை. அதனால் இவற்றை பார்ப்பது என்பது கடினம். வெறும் கண்ணால் புதிய மினி நிலவை பார்க்க முடியாது” என்று கூறியுள்ளார்.
ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் என கார்லோஸ் டி லா ஃபுவெண்டே மார்கோஸ் மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத ரிச்சர்டு பின்சில், இந்த விண்கல் (மினி நிலா), வெடித்து சிதறிய நிலாவின் ஒரு பகுதியா அல்லது சிறுகோளா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த மினி நிலவு கிட்டதட்ட 57 நாட்களுக்கு பூமியை சுற்றி வரும் என்றும், ஆனால் முழு சுற்றுவட்டப்பாதையை முடிக்காது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் நாளை முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை இந்த நிலவை நம்மால் பார்க்க முடியும். நவம்பர் 25 அன்று பூமியில் இருந்து பிரிந்து பிரபஞ்சத்தின் வழியாக அதன் தனிப்பாதையை தொடரும். அதன்பின் இது 2055இல் மீண்டும் பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits -ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்