ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சம் மஹிந்திரா தார் ராக்ஸ் முன்பதிவு! - MAHINDRA THAR ROXX BOOKING - MAHINDRA THAR ROXX BOOKING
ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சத்து 76ஆயிரத்து 218 (1,76,218) தார் ராக்ஸ் (Thar Roxx) கார்களுக்கு முன்பதிவைப் பெற்று, மஹிந்திரா (Mahindra) சாதனை படைத்துள்ளது.
மஹிந்திரா தார் ராக்ஸ் கார் ஒரு மணி நேரத்தில் 1.76 லட்சம் முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. (Mahindra)
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா (Mahindra), ஆகஸ்ட் மாதத்தில் ஐந்து கதவுகள் கொண்ட தார் ராக்ஸ் (Thar Roxx) காரை அறிமுகப்படுத்தியது. இதற்கான முன்பதிவு அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கியது. முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே, நிறுவனம் லட்சங்களில் முன்பதிவைப் பெற்று சாதனை படைத்தது.
தார் ராக்ஸ் எஸ்யூவி காரை மஹிந்திரா அறிமுகம் செய்த நாள் முதலே, இதன் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த சூழலில் அக்டோபர் 3 முதல் நிறுவனம் இந்த கார் மாடல்களுக்கான முன்பதிவுகளைத் தொடங்கியது. காலை 11 மணிக்கு தொடங்கிய முன்பதிவைத் தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்தில், மொத்தம் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 218 (1,76,218) பேர் தார் ராக்ஸ் காரை முன்பதிவு செய்தனர்.
நவராத்திரி அன்று முதல் முன்பதிவுகளைத் தொடங்கிய மஹிந்திரா, ஒரு மணிநேரத்தில் இமாலய சாதனையை புரிந்தது ஆட்டோமொபைல் நிறுவனங்களை சற்று திணறடித்துள்ளது. அக்டோபர் 12-ஆம் தேதி முதல் தார் ராக்ஸ் காரை நிறுவனம் விநியோகம் செய்யத் தொடங்குகிறது.
சக்திவாய்ந்த எஞ்சின்: மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) கார்கள் இரண்டு எஞ்சின் விருப்பங்களைக் கொண்டுள்ளது. இது இரண்டு லிட்டர் TGDI, mStallion (RWD) மற்றும் 2.2 லிட்டர் mHawk (RWD மற்றும் 4x4) இன்ஜின்களால் இயக்கப்படுகிறது.
மேனுவல் டிரான்ஸ்மிஷனில் 119 kW சக்தி: இரண்டு லிட்டர் எஞ்சினிலிருந்து, இது 119 kW (கிலோவாட்) சக்தியையும் 330 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் 130 kW சக்தியையும் 380 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 2.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 111.9 கிலோவாட் பவரையும், 330 Nm டார்க் திறனையும் கொண்டுள்ளது.
பிற அம்சங்கள் என்னென்ன?: நிறுவனம் மஹிந்திரா தார் ராக்ஸ் காரின் பல சிறப்பு அம்சங்களை வழங்குகிறது. ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கான ஏர்பேக்குகள், சைடு மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள், டிபிஎம்எஸ், பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா, இ-கால், SOS, ரியர் டிஸ்க் பிரேக்குகள், இஎஸ்சி, இபிடி, ஏபிஎஸ், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், இஎஸ்எஸ், மேம்பட்ட அட்ரினாக்ஸ் (Adrenox) தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை இதில் அடங்கும்.
மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி கார் (Mahindra)
பெரிய டயர்கள்: ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், 26.03 செமீ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 26.03 செமீ எச்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே, சரவுண்ட் வியூ கேமரா, லெவல்-2 ADAS பாதுகாப்பு, முன் காற்றோட்டமான இருக்கைகள், தானியங்கி வெப்பநிலை கட்டுப்பாடு, காற்றோட்டமான இருக்கைகள், பின்புற ஏசி வென்ட்கள், தானியங்கி முகப்பு விளக்குகள் (Auto Headlamps) ஹெட்லேம்ப்கள், 18 மற்றும் 19 இன்ச் பெரிய டயர்கள், பின்புற வைப்பர் ஆகிய சிறப்பம்சங்கள் இந்த தார் ராக்ஸ் காரில் உள்ளன.
ஆஃப் ரோடு அரக்கன்: பனோரமிக் சன்ரூஃப், எல்இடி விளக்குகள், எல்இடி டிஆர்எல்கள், டூயல்-டோன் இன்டீரியர், பனி, மணல் மற்றும் களிமண் நிலப்பரப்பு போன்ற டிரைவிங் முறைகள் ஆகிய அம்சங்கள் அடங்கும்.
மைலேஜ்: பெட்ரோல் வகை தார் ராக்ஸ் 12.4 கிலோமீட்டரும், டீசல் வகை தார் ராக்ஸ் 15.2 கிலோமீட்டர் மைலேஜும் தரும் என நிறுவனம் உறுதியளித்திருக்கிறது.
உள்புற தோற்றம்: இப்போது வரை, நிறுவனம் அதன் உட்புறத்தில் ஐவரி நிறத்தால் ஆன உள்புற அலங்காரத்தை மட்டுமே வழங்குறது. ஆனால் அக்டோபர் ஒன்றாம் தேதி அன்று, நிறுவனம் தங்களின் மஹிந்திரா தார் ராக்ஸ் எஸ்யூவி காரின் உள்புறத்தில் மோச்சா பிரவுன் நிறம் புதிதாக சேர்த்துள்ளதாக அறிவித்தது. இருப்பினும், இந்த வண்ண விருப்பம் 4X4 வகைகளில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விலை எவ்வளவு?:நிறுவனம் தார் ராக்ஸ் காரை ஆறு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் இரண்டு வீல் டிரைவ் (2WD) வகைகளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.99 லட்சத்தில் தொடங்குகிறது. மேலும், இதன் டாப் வகைகளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.20.49 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முறையே 4 வீல் டிரைவ் வகைகளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18.79 லட்சம் முதல் தொடங்குகிறது. இதன் மேம்பட்ட மாடலை ரூ.20.99 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.