மாருதி ஸ்விஃப்ட் CNG 2024: மூன்று ஆப்ஷன்கள், சிறந்த மைலேஜ், பட்ஜெட் விலை! - New Maruti Swift CNG Mileage - NEW MARUTI SWIFT CNG MILEAGE
Maruti Suzuki Swift CNG Launch: இந்தியாவில் 32.85 கிலோமீட்டர் (km) எனும் சிறந்த மைலேஜ் உடன், பட்ஜெட் விலையில் மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி மாடல் காரை அறிமுகம் செய்தது.
கார் விற்பனையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி, மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்விஃப்ட் சிஎன்ஜி (Swift CNG) காரை பட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தியது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.19 லட்சம் ஆகும்.
மொத்தம் மூன்று வகைகளில் புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 2024 (Maruti Suzuki Swift CNG 2024) கார் இந்திய சாலைகளில் பயணிக்கத் தயார் நிலையில் உள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி முதல் இந்த கார் வழங்கப்படுகிறது.
உள்புற மற்றும் வெளிப்புறத் தோற்றம்:
புதிய ஸ்விஃப்ட் CNG காரின், வடிவமைப்பு, அம்சங்களைப் பார்க்கும்போது, பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. எல்இடி மூடுபனி விளக்குகள் (LED Fog lamp), எல்இடி புரொஜெக்டர் முகப்பு விளக்குகள் (LED projector headlamps), எல்இடி டெயில்லைட்கள், 15 இன்ச் அலாய் வீல்கள், ஒன்பது அங்குல தொடுதிரை (9" Touchscreen) அமைப்பு, தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் OTA மேம்படுத்தல்கள் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகப் பார்க்கலாம்.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 2024 உள்புறத் தோற்றம். (Maruti Suzuki)
எஞ்சின் திறன்:
இதில், மூன்று சிலிண்டர்கள் அடங்கிய 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் (NA) பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சினை பெட்ரோலில் இயக்கும்போது, 80 bhp சக்தியையும், 112 Nm டார்க்கையும் வெளிப்படுத்தும்.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 2024 பாதுகாப்பு ஏர்பேக்குகள். (Maruti Suzuki)
அதுவே சிஎன்ஜி-யில் இயக்கும்போது, 69 bhp சக்தியையும், 102 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. 5- ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதான் ஒரேத் தேர்வு என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாருதி ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் வகைகளின் விலைப் பட்டியல் (New Maruti Swift CNG car models price in India):
மூன்று வகைகளில் வரும் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி சுசூகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி 2024 வெளிப்புறத் தோற்றம். (Maruti Suzuki)
வகை
விலை (எக்ஸ்-ஷோரூம்)
ஸ்விஃப்ட் சிஎன்ஜி VXi 2024
ரூ.8.19 லட்சம்
ஸ்விஃப்ட் சிஎன்ஜி VXi (O) 2024
ரூ.8.46 லட்சம்
ஸ்விஃப்ட் சிஎன்ஜி ZXI
ரூ.9.19 லட்சம்
என்ன மைலேஜ் கிடைக்கும்? (Swift CNG Mileage)
சிஎன்ஜி-யில் வாகனத்தை இயக்கும்போது, கிலோவுக்கு 32.85 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என்று நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இது பழைய மாடல் ஸ்விஃப்ட் காரை விட 6% அதிகமாகும். இது மாருதி சுசூகி நிறுவனத்தின் 14-ஆவது சிஎன்ஜி மாடல் ஆகும்.