ஐதராபாத் : இந்தியா உள்பட 92 நாடுகளை சேர்ந்த பயனர்களின் ஐபோன்களில் மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதல் நடத்தப்படலாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஒ குழுமத்தின் சர்ச்சைக்குரிய பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் போல் தாக்குதல் நடத்தக் கூடும் என ஆப்பிள் நிறுவனம் எச்சரித்து உள்ளது.
உங்களது ஐபோனில் மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்து உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பி உள்ளது. உங்கள் ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப்பட்டு உள்ள ஐபோனை மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதல் நடத்த குறிவைக்கப்பட்டு உள்ளதை ஆப்பிள் நிறுவனம் கண்டறிந்து உள்ளதாகவும்
நீங்கள் யார் அல்லது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கலாம் இத்தகைய தாக்குதல்களைக் கண்டறியும் போது முழுமையான உறுதியை அடைய முடியாது என்றாலும், ஆப்பிள் இந்த எச்சரிக்கையில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது, தயவுசெய்து இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள் என ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஒ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் தாக்குதல் போன்று மெர்சனரி ஸ்பைவேர் தாக்குதல் மூலம் பயனரின் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப் தகவல்கள், பயனர்கள் கடைசியாக எங்கு சென்று வந்தார் என்ற லோகேஷன் தரவுகள் உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் ஹேக் செய்ய முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
கடந்த கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களுக்கு ஸ்பைவேர் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மஹுவா மொய்த்ரா, சிவ சேனா உத்தவ் அணியின் தலைவர் பிரியங்கா சத்ருவேதி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் பவன் கெரா உள்ளிட்டோருக்கு இது போன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் முதல் ஆப்பிள் நிறுவனம் இது போன்ற அச்சுறுத்தல்கள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடும் முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இது பெரும்பாலும் அரசு ஆதரவு பெற்ற குழுக்கள் நடத்தும் சைபர் தாக்குதல்களை கண்டறிந்து தொடர்புடையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தெலங்கானா எம்எல்சி கவிதா கைது! திகார் சிறையில் வைத்து சிபிஐ கைது! மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணை! - Delhi Liquor Scam