தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற இளைஞர் மர்ம மரணம்.. போலீசார் விசாரனை! - murder - MURDER

Youth murder: கும்பகோணம் அருகே வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்ற இளைஞரை, மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி படு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் ஆய்வு மேற்கொண்ட புகைப்படம்
போலீசார் ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 7:47 PM IST

இளைஞரின் உறவினர்கள் பேட்டி (Video Credit - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர் காவல் சரகம், நெய்குன்னம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்எல்ஏ கா.சோ.கண்ணனின் சகோதரியைத் திருமணம் செய்துள்ளார். இவர்களது மகன் கலைவாணன் (30) இவர் வேளாண் பணி செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்றிரவு, தனது வயலுக்குத் தண்ணீர் பாய்ச்ச மோட்டார் போடப் போனவர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் வயலுக்குச் சென்று பார்த்த போது, அங்கு கலைவாணன் மர்ம கும்பலால், அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு இறந்து கடந்துள்ளார்.

இது குறித்து பந்தநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தடை அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் உள்ள கைரேகைகளைப் பதிவு செய்து வருகின்றனர். தஞ்சையில் இருந்து துப்பு துலங்க ஏதுவாக, மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுயுள்ளது.

இது குறித்து உயிரிழந்த கலைவாணன் உறவினர்கள் கூறுகையில்,"கடந்த சில மாதங்களுக்கு முன் கலைவாணன் வீட்டில் இருந்த வைக்கோல் போரை சில மர்ம நபர்கள் தீயிட்டுக் கொளுத்தி விட்டு, இது தொடரும் என அருகில் இருந்து சுவரில் எச்சரிக்கை விடுக்கும் வகையில் எழுதி வைத்துச் சென்றிருந்தனர்.

இது குறித்து நான்கு முறை காவல்துறையில் புகார் அளித்தும் போலீசார் முறையான விசாரணையை முழுமையாக மேற்கொள்ளவில்லை. போலீசார் முறையாக விசாரணை மேற்கொண்டு இருந்தால் இந்த படுகொலை நடந்து இருக்காது.

இது மட்டுமின்றி, இப்படுகொலை சம்பவம் நடப்பதற்கு முன்பு கலைவாணன் வீட்டுக்குள் உயிரா ? பயிரா ? என பேப்பரில் எழுதி மர்ம நபர்கள் வீசி சென்றுள்ளனர். தொடர்ந்து கலைவாணனுக்கு எதிர்த்தரப்பிலிருந்து அச்சுறுத்தல் இருந்த போதும் அதற்குச் சரியான நடவடிக்கையினை போலீசார் எடுக்கவில்லை என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் கலைவாணனைக் கொலையைத் தொடர்ந்து தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை எனக்கூறும் அவரது உறவினர்கள், குற்றவாளியைப் பிடிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க:பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு: இரண்டு பேர் கைது - சிறப்பு புலனாய்வு போலீசார் நடவடிக்கை!

ABOUT THE AUTHOR

...view details