நீலகிரி: நீலகிரி மாவட்டம், கூடலூர் எஸ்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர் இன்று (மார்ச் 30) குண்டபுழா வனத்தை ஒட்டிய புன்னம்புழா பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க, தனது ஏழு நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, மணிகண்டன் எதிர்பாராத விதமாக ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அவரது நண்பர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில், தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மணிகண்டனை தேடி வந்தனர். சுமார், 7 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு, மணிகண்டன் சடலமாக மீட்கப்பட்டார்.