கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவியை 23 வயது இளைஞர் ஒருவர் காதலிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மாணவி பள்ளி முடித்து விட்டு வீடு திரும்பியபோது, இளைஞன் மாணவியை தனிமையில் சந்தித்து தன்னுடன் பேச வேண்டும் என வற்புறுத்தியதாகவும், அப்பொழுது மாணவியைக் கன்னத்தில் ஓங்கி அடித்ததாகவும் விசாரணையில் கூறப்படுகிறது.