திருவண்ணாமலை: திருவண்ணாமலையைச் சேர்ந்த 27 வயது நபர், கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி ஒரு சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து, சதீஷை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை! - Tiruvannamalai pocso case - TIRUVANNAMALAI POCSO CASE
Tiruvannamalai Pocso case: திருவண்ணாமலையில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு நீதிமன்றம் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
Published : Jun 7, 2024, 5:08 PM IST
அந்த வழக்கு சம்பந்தமான விசாரனை திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று நீதிபதி பார்த்தசாரதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அந்நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதன் அடிப்படையில், அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:ரோமியோ ஜூலியட் கதையை மேற்கோள் காட்டிய நீதிபதி.. போக்சோ வழக்கு ரத்து! - Mhc Canceled Pocso Act Case