தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொலையில் முடிந்த மதுபோதை தகராறு - Murder incident in erode - MURDER INCIDENT IN ERODE

youngsters arrest in murder case: கோபிசெட்டிபாளையம் அருகே அரசு பார் ஒன்றில்  இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கியதில் மரக்கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேரை சிறுவலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கொலையில் ஈடுபட்ட இளைஞர்களின் புகைப்படம்
கொலையில் ஈடுபட்ட இளைஞர்களின் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 11:22 AM IST

ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவில் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி(61). இவர் வேட்டைக்காரன் கோவில் பகுதியில் மரக்கடை வைத்து நடத்தி வருகிறார்.மது பழக்கம் உள்ள பாலுசாமி கொளப்பலூர் அருகே உள்ள காமராஜ் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மது கடையில் மது அருந்த சென்றுள்ளார்.

அப்போது அங்கு ஏற்கனவே மது அருந்திக் கொண்டிருந்த கலிங்கியம் தங்கமலைகரடு பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும் பாலுசாமிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த பாலுசாமி இளைஞர் ஒருவரை கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அருகிலிருந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பாலுசாமியை தாக்கியுள்ளனர்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் இருந்த பாலுசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பாலுசாமி உயிரிழந்தார்.

இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடிவந்த நிலையில் பாலுசாமியை தாக்கியது கலிங்கியம் ஊராட்சிக்குட்பட்ட தங்கமலை கரடு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த கவுதம் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தங்கமலை கரடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் உள்ளதாக கிடைத்த தகவலின் பெயரில் வீட்டுக்கு சென்ற காவலர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:'என்னடா லுக்கு, யாரை பார்த்து சிரிக்கிற' மதுபோதையில் மல்லு கட்டிய இளைஞர்கள்! - Youngsters Fight In Tirupattur

ABOUT THE AUTHOR

...view details