சென்னை: பொதுவாக நம் வாழ்வில் நல்ல விஷயம் ஏதேனும் நடந்தால் சாக்லேட் கொடுத்து கொண்டாடுவோம். அவ்வாறு மகிழ்ச்சியைப் பரவச் செய்யும் சாக்லேட்களை கொண்டாடும் நாள் இன்று (ஜூலை 7). எனவே, நமது ஸ்டிரஸ் பஸ்டராக இருந்து அழும் குழந்தை முதல் மன அழுத்தமுள்ள பெரியவர்கள் வரை தனது சுவையால் கட்டிப்போடும் சாக்லேட்களின் வரலாறு, உருவாகும் முறை மற்றும் அவற்றின் நன்மை, தீமை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.
சாக்லேட்கள் என்னும் மேஜிக் பீன்:சாக்லேட் என்றால் நியாபகம் வருவது பிறந்தநாள் கொண்டாட்டமாக இருந்தாலும், அம்மாவிடம் அடம்பிடித்து வாங்கிய சாக்லேட்டின் சுவையும், அனுபவமும் மறக்க முடியாதவை. இந்த சாக்லேட் தினத்தை கொண்டாடும் நோக்கம் அனைவரின் குழந்தை பருவத்தையும், சாக்லேட்களின் இனிமையையும் போல் புத்துணர்ச்சியைப் பரவ என வைத்துக் கொள்ளலாம். சாக்லேட்களில் எத்தனை வகைகள்? வெள்ளை சாக்லேட், பால் கலந்த சாக்லேட், அடர் நிற சாக்லேட், இனிப்பு அடர் நிற சாக்லேட், மிதமான அடர் நிற சாக்லேட், கசப்பு-இனிப்பு சாக்லேட், இனிப்பில்லாத சாக்லேட் என ஒருவரின் மனநிலை, சுவை விருப்பத்திற்கேற்ப ஏழு கண்டங்களில் இருக்கும் மனிதர்களை கட்டிப்போடும் வித்தை கண்டது சாக்லெட்கள். இதனால் இதை "மேஜிக் பீன்" எனவும் அழைக்கிறார்.
சாக்லேட்டும் வரலாறும்:சாக்லேட்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலக்கட்டம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், சாக்லேட்கள் ஐரோப்பிய கண்டத்தில் 1550ஆம் ஆண்டில் ஜூலை 7ஆம் தேதி கொண்டுவரப்பட்டதாக வரலாறு கூறும் தகவலின் இந்நாள் சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது.
செய்முறையும் நறுமணமும்:கோகோ மரங்களில் இருந்து முதலில் பீன்ஸ்கள் பறிக்கப்டுகிறது. பின் அந்த பின்ஸில் இருக்கும் வெள்ளை நிறப் பகுதிகளை நீக்கி உலர வைக்கப்படுகிறது. இவ்வாறு நொதித்தல் முறையை செய்யும் போது சாக்லேட்கள் புளிப்பான சுவையைப் பெறுகின்றன. பின் உலர வைத்த பீன்ஸின் தொளிகளை நுனி முனியோடு உரித்து எடுக்கும்போது மணம் வாய்ந்த கோகோ பொருட்கள் கிடைக்கின்றன. பின் அவற்றை அரைத்து, வெண்ணெய் போன்ற பதத்தில் கொண்டு வந்து, அதில் சர்க்கரை மற்றும் பால் சேர்க்கப்படுகிறது. இந்த பொருட்களின் அளவுகளைக் கொண்டு பல வகையான சாக்லேட்கள் உருவாக்கப்படுகின்றன.