கோயம்புத்தூர்:உயர் கல்வி, வேலை, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கோவை மாநகருக்குள் ஆயிரக்கணக்கானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதனால் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்த வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 9 கி.மீ தூரம் உயர் மட்ட மேம்பாலம் கட்டப்படும் என அறிவித்த நிலையில் இதற்கான பணிகள் துவங்கி நடைற்று வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அவிநாசி மேம்பாலம் நீட்டிப்பு பணி தொடக்கம் (Credits - ETV Bharat Tamil Nadu) கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த மேம்பால பணிகள் சுமார் 60% நிறைவடைந்துள்ளது. மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் 2025 ஜனவரி மாதத்திற்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் கடந்த 7 தேதி கோவைக்கு முதல்வர் ஸ்டாலின் வந்த பொழுது 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதையும் படிங்க:ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை - உயர் கல்வித்துறை எச்சரிக்கை!
அதில் அவிநாசி சாலையில் கட்டப்பட்டு வரும் உயர் மட்ட மேம்பாலத்தை சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ தூரத்திற்கு நீடிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும் இதற்காக 600 கோடி ருபாய் நிதியையும் ஒதுக்கீடு செய்தார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு வாரத்திலேயே நீடிக்கப்படும் மேம்பால கட்டுமான பணிகளுக்காக மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக கோல்டு வின்ஸ் பகுதியில் இருத்து சின்னியம்பாளையம் வரை 5 இடங்களில் மண் பரிசோதனை செய்யக்கூடிய பணியில் மாநில நெடுஞ்சாலைதுறையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வாகன ஓட்டியில் கூறுகையில், "அவிநாசி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு தீர்வு காணும் வகையில் உயர் மட்ட மேம்பால பணிகள் நடைற்று வருகிறது. இதனை மேலும் 5 கி.மீ நீட்டிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும். அதே சமயம் நேர விரையம் குறையும் இந்த பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில், "ஏற்கனவே அவினாசி சாலையில் 9 கி.மீ தூரம் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதனை மேலும் 5 கி.மீ தூரம் நீட்டிக்கும் வகையில் பூர்வாங்க பணிகள் துவங்கி உள்ளது. இதில் முதல் கட்டமாக மண் பரிசோதனையும் அதனை தொடர்ந்து அடுத்த கட்ட பணிகள் நடைபெறும்" என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat) ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்